Thursday, July 4, 2013

பொதுநலவாய நாடுகள் அபைம்பின் பிரதிப் பொதுச் செயலாளர் மாசாரீ மாவபா இலங்கைக்கு விஜயம்!

Thursday, July 04, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் அபைம்பின் பிரதிப் பொதுச் செயலாளர் மாசாரீ மாவபா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டின் ஏற்பாடுகளை நடவடிக்கைகளை கண்காணிக்கும் நோக்கில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
 
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டுக்குழு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். தேசிய விசாரணைகளை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு பயிற்சி அளிக்கும் நிகழ்வு ஒன்றும் நடத்தப்பட உள்ளது.
 
மனித உரிமை மீறல் விசாரணைகளை கிரமமான முறையில் நடாத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
 

No comments:

Post a Comment