Wednesday, July 03, 2013
இலங்கை::டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய முயற்சி மேற்கொண்டதாக செல்வகுமாரி சந்த்தியசீலி என்ற பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இலங்கை::டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய முயற்சி மேற்கொண்டதாக செல்வகுமாரி சந்த்தியசீலி என்ற பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளப்போவதாக சந்தேக நபர், சட்டத்தரணி ஊடாக கொழும்பு உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
2004ஆம் ஆண்டில் அமைச்சர் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மற்றுமொரு நபரும் உயிரிழந்தனர்.
குறித்த பெண் தமது கட்சி ஆதரவாளர் எனவும் அவருக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என்பதே தனிப்பட்ட கருத்து எனவும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்திருந்தார். எனினும், நீதிமன்றின் தீர்ப்புக்களில் தலையீடு செய்யப்போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment