Wednesday, July 03, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டம் குறித்த இந்தியாவின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டியதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பான பிரச்சினை உள்நாட்டு ரீதியானது எனவும் அது தொடர்பிலான தீர்வுத் திட்டங்களும் உள்நாட்டு ரீதியிலேயே
முன்வைக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை::13ம் திருத்தச் சட்டம் குறித்த இந்தியாவின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டியதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பான பிரச்சினை உள்நாட்டு ரீதியானது எனவும் அது தொடர்பிலான தீர்வுத் திட்டங்களும் உள்நாட்டு ரீதியிலேயே
இந்த விடயத்தில் இந்தியாவின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செய்வதனால் இரு தரப்பு உறவுகளில் விரிசல் ஏற்படும் என அர்த்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமே பொருத்தமானது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் சுட்டி;காட்டியுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டு ரீதியான பொறிமுறைமை ஒன்றின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும், 13ம் திருத்தச் சட்டம் குறித்த விவாதம் இரு தரப்பு உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா எமது நண்பர் எனவும், இந்த உறவுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் குறித்த சர்ச்சை உள்நாட்டு ரீதியானது என்பதனையும் அதற்கான தீர்வு உள்நாட்டு ரீதியில் முன்வைக்கப்பட வேண்டும் என்பதனையும் இந்தியா புரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் தமிழ் முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாகவும் மாகாணசபை முறைமையின் மூலம் அனைவரினதும் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment