Wednesday, July 3, 2013

தமிழக அரசு அறிவிப்பு:இலங்கை சிறையில் இருந்து 49 மீனவர் விடுவிப்பு!

Wednesday, July 03, 2013
சென்னை::முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் இலங்கை சிறையில் இருந்து 49 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராமேஸ்வரத்தை சேர்ந்த 24 மீனவர்கள், கடந்த மாதம் 5-ம் தேதி பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். அன்றைய தினமே ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 25 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம், 49 மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். இதன் பயனாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் அனுராதபுரம் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். மேலும் 25 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து இன்று விடுதலை  செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்புவர்.

No comments:

Post a Comment