Friday, July 12, 2013

மத்திய,வடமேல் மற்றும் வட மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 அல்லது 28 ஆம் திகதி நடைபெறலாம்!

Friday, July 12, 2013
இலங்கை::மத்திய,வடமேல் மற்றும் வட மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 அல்லது 28 ஆம் திகதி நடைபெறலாம் இன தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பி

இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ரிய தெரிவித்துள்ளார்.
 
தேர்தல்கள் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே தேர்தல்கள் ஆணையாளர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
 
இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை நடைபெறவுள்ள ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளில் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் தினத்தில் வீடுகள்தோறும் சென்று மேற்கொள்ளப்படுகின்ற தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கப்பபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment