Friday, July 12, 2013
இலங்கை::வடக்கில் இன்னும் 94 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தில் மாத்திரமே நிலக்கண்ணிவெடி அகற்ற வேண்டியுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
சர்வதேச தரங்களுக்கு அமை நிலக்கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கை 2002 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்போது இரண்டாயிரத்து 64 சதுர கிலோமீற்றர் பகுதி நிலலக்கண்ணிவெடி அபாயம் நிலவும் பிரதேசமாக இனங்காணப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் யுத்தம் நிறைவுபெற்றதன் பின்னர் நிலக்கண்ணிவெடி அபாயம் நிலவும் பிரதேசமாக 505 சதுரகிலோமீற்றர் பிரதேசம் இனங்காணப்பட்டிருந்தது.
குறித்த நிலப்பரப்பில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் படிப்படியாக நிறைவு செய்யப்பட்டு தற்போது 94 சதுர கிலோமீற்றர் பிரதேசத்திலேயே நிலக்கண்ணிவெடி அகற்ற வேண்டியுள்ளதாக இராணுவ பேச்சாளர் சுட்டிக்காட்டயுள்ளார்.
கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த மனிதாபிமான நடவடிக்கையில் இராணுவத்தினருடன் நான்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment