Wednesday, July 3, 2013

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு, காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்கள் வழங்கப்படும்!

Wednesday, July 03, 2013
இலங்கை::13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு, காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்கள் வழங்கப்படும் என  இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்திற்கு அறிவிக்க உள்ளது.
 
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை புதுடெல்லியில் இந்திய அதிகாரிகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் போது, அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
நாளை இந்தியா செல்லும் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்திஷ்,  அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மத்தாய், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
 
காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால்,  வடக்கில் இராணுவ முகாம்களை வைத்திருப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், முதலமைச்சர் தான் விரும்பியது போல், காவற்துறையை வழி நடத்த வாய்ப்புள்ளது குறித்தும் பசில், இந்திய அதிகாரிகளிடம் தெளிவுப்படுத்த உள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன. 

No comments:

Post a Comment