Wednesday, July 03, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை முதலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும். அதன் பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தேர்தல் அறிவிப்பு வெளியானதும், அதில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் முதலில் தீர்மானிக்கப்படும் அதற்கு பின்னர் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறான நிலையில், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வட மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே இவை தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும். இந்நிலையில், தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்தார்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்வதாயின் அதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை பெறவேண்டும்: சுரேஸ் பிரேமச்சந்திரன்!
வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்வதாயின் அதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை பெறவேண்டும்;' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அங்கீகாரம் வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் யாழ். கிளை அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ஐந்து கட்சிகளின் கூட்டாகும். இதில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் யாழ். கிளை அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மாவை சேனாதிராசா, தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என்று நான் சொல்லவில்லை. இருந்தாலும் இந்த விடயத்தில் அனைவரதும் கருத்துக்களும் அறியப்படுவது முக்கியமானது' என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு கட்சி இவ்வாறான அறிவிப்பை விடுக்கும் போது ஏனைய கட்சிகளும் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்கள் தொடர்பில் அறிவித்தால் குழப்பம் தான் ஏற்படும். நாங்கள் பூதகரமான சத்திகள் என்று தமிழரசுக் கட்சி தான்தோன்றித்தனமாகச் செயற்படக்கூடாது.
கூட்டமைப்பு அங்கம் வகிக்கும் ஒரு கட்சி தனது கட்சி சார்பானவரை பிரேரிப்பது அது அந்த கட்சி சார்பானதாகவே இருக்கும். அவ்வாறு ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்யவதென்றால் கூட்டமைப்பில் அங்கீகாரம் பெறவேண்டும். கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்' என்றார்.
முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவை பிரேரித்து அக்கட்சியின் தலைவர் இரா. சம்மந்தனுக்கு கடிதம் மூலம் அறிவித்திருக்கிறது தமிழரசுக் கட்சியின் யாழ் கிளை. ஆனால், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்றும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.
இவை ஒரு ஆரோக்கியமான சூழல் அல்ல. ஒரு கட்சி தீர்மானிக்க வேண்டிய விடயத்தை ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள கட்சியின் கிளைகளும் தனித்தனியே முடிவுகளை எடுக்க முடியாது. கூட்டமைப்பு என்ற அடிப்படையில் இது தொடர்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேசித் தீர்மானிப்பது தான் ஆரோக்கியமான ஒன்றாக அமையும்' என்றார்.
இதேவேளை, 'தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். நிதிக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று தமிழரசுக்ட்சிக்கு தெரிவித்திருக்கின்றோம். அவ்வாறான குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். குழுக்கள் அமைத்தால் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்க முடியும்' என்று சுரேஸ் பிரேமசந்திரன் எம்.பி. மேலும் கூறினார்...

No comments:
Post a Comment