Tuesday, July 2, 2013

நாட்டுக்கு பாதகமான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரங்கள் முதலமைச்சருக்கு இருப்பின் 13ஆவது திருத்தத்தை திருத்த வேண்டும்: சரத் பொன்சேகா!

Tuesday, July 02, 2013
இலங்கை::நாட்டுக்கு பாதகமான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரங்கள் முதலமைச்சருக்கு இருப்பின் 13ஆவது திருத்தத்தை திருத்த வேண்டும் என ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

முதலமைச்சருக்கு கெடுதியான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் இருக்குமாயின் அதை நிறுத்தும் வழியை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல இனங்களினதும் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தத்தை திருத்துவது ஏற்புடையதல்ல என பொன்சேகா மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment