Tuesday, July 02, 2013
இலங்கை::யுத்தத்தை நிறைவுறுத்தி நீண்ட சமாதான பாதையில் முன்செல்லும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம் என்று பொது நலவாய நாடுகளின் உள்ளுராட்சி ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கை::யுத்தத்தை நிறைவுறுத்தி நீண்ட சமாதான பாதையில் முன்செல்லும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம் என்று பொது நலவாய நாடுகளின் உள்ளுராட்சி ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பைனாஸ் டைம்ஸ் என்ற செய்தி தாளுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே, ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற இடங்களில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப பொது நலவாய நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்படடுள்ளது.
இலங்கையில் இடம்பெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாடானது, அரச தலைவர்களுக்காக மாத்திரம் இன்றி, அடிமட்ட மற்றும் பொது மக்களுக்கான ஒன்றியமாக அமைய வேண்டும்.
எவ்வாறாயினும் இலங்கை சர்வதேசத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம் எனவும் பொது நலவாய நாடுகளின் உள்ளுராட்சி ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment