Wednesday, July 03, 2013
லண்டன்::அமெரிக்க உளவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர் எட்வர்டு ஸ்நோடன். இவர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு வெளிநாடுகளின் தூதரக அலுவலகங்களை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டினார். எனவே அவரை கைது செய்ய அமெரிக்கா முயன்றது. அதை தொடர்ந்து ஆவணங்களை பதிவு செய்த லேப்டாப்புடன் ஹாங்காங் தப்பிச் சென்றார். அங்கிருந்த ரஷ்யா சென்ற அவர் ஈக்குவடார் நாட்டில் தஞ்சமடைய அடைக்கலம் கேட்டுள்ளார். தற்போது அவர் எங்கிருக்கிறார் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையை லண்டனில் இருந்து வெளியாகும் தி கார்டியன் என்ற பத்திரிகை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திலும் உளவு பார்க்கப்பட்டது என ஸ்நோடன் வெளியிட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரான்சு, இத்தாலி, ஐரோப்பிய யூனியன் தூதரகம், கிரேக்க நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, துருக்கி உள்ளிட்ட 38 நாடுகளின் தூதரகங்களும் உளவு பார்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு நடைபெற்ற உளவுப் பணிக்கு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, உள்ளே இருப்பவர்களின் டெலிபோன் அழைப்புகளை ஒட்டுக் கேட்க நவீன ஆண்டெனா கருவிகளும், ஒட்டுக் கேட்பு கருவிகளும் ரகசியமாக பொருத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய யூனியன் தூதரகத்தில் உள்ள பேக்ஸ் கருவியில் டிராப் மையர் என்ற ரகசிய உளவு கருவி பொருத்தப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தூதரக அலுவலகங்களில் ஐரோப்பிய யூ
னியன் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.
ஸ்னோடென் அடைக்கலம் கோர இந்தியா திறந்த வீடு அல்ல: சல்மான் குர்ஷித்!
புருனே::உலக நாடுகளை அமெரிக்கா எப்படியெல்லாம் உளவு பார்த்தது என்பதை அம்பலப்படுத்திய ஸ்னோடென் இந்தியாவில் அடைக்கலம் கோரியதாக வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அனைவரும் தஞ்சமடைய இந்தியா ஒன்றும் திறந்த வீடு அல்ல என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவினால் தேடப்பட்டு வருகிறவர் ஸ்னோடென். அவர் இந்தியா, ்ஈகுவடார் உள்ளிட்ட 20 நாடுகளிடம் அடைக்கல கோரி கடிதம் எழுதியிருப்பதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது. இதுபற்றி புருனேவில் நடைபெறும் ஏசியான் மாநாட்டுக்குச் சென்றுள்ள சல்மான் குர்ஷித்திடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சல்மான் குர்ஷித்,
இது பற்றி நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. கடந்த காலங்களில் இந்தியா அடைக்கலம் கொடுத்திருக்கிறது. ஆனால் அடைக்கலம் கோருகிறவர்கள் அனைவரும் இந்தியா வர இது ஒன்றும் திறந்த வீடல்ல.. எங்களுக்கும் சில கொள்கைகள் இருக்கின்றன என்றார். ஏற்கெனவே விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே இந்தியாவிடம் அடைக்கலம் கோரி கடிதம் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அப்படி ஒரு கடிதமே எங்களிடம் இல்லை என்று மத்திய அரசு சாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment