Monday, July 1, 2013

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை குறைக்கும் வகையில் கொண்டு வரப்படும் எந்த யோசனையாக இருந்தாலும் அதனை எதிர்ப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ தீர்மானித்துள்ளது!

Monday, July 01, 2013
இலங்கை::13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை குறைக்கும் வகையில் கொண்டு வரப்படும் எந்த யோசனையாக இருந்தாலும் அதனை எதிர்ப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீடம் தீர்மானித்துள்ளது.
 
கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகமாக தருஸ்ஸலாமில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற அதியுயர்பீடத்தின் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 மாகாண சபைகளின் அதிகாரங்களில் உள்ள எந்த அதிகாரத்தை இரத்துச் செய்வதை தமது கட்சி எதிர்ப்பதாகவும்  கிழக்கு மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக முன்வைக்கப்படும் யோசனைகளை நிபந்தனையின்றி எதிர்க்க போவதாகவும் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தலைவரின் இந்த தீர்மானத்திற்கு கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர்  சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்..
13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட இனப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமது கட்சி பங்கேற்காது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முண்ணனி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இத் தெரிவுக் குழுவில் பங்கேற்காது என அறிவித்துள்ள நிலையில் தமது கட்சியும் பங்கேற்கப்போவதில்லை என தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.

கண்டியில் நேற்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள வடக்கு தேர்தலில் தமது கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
 
 
 

No comments:

Post a Comment