Monday, July 1, 2013

இன்றிரவு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி& சி.22!

Monday, July 01, 2013
சென்னை::பி.எஸ்.எல்.வி& சி.22 ராக்கெட் இன்று இரவு 11.41க்கு விண்ணில் பாய்கிறது. அனைத்து கருவிகளும் சிறப்பாக இயங்குவதால் ராக்கெட்டுக்கான தாங்குதூண்கள் உள்ளிட்ட அனைத்து இதர பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு ராக்கெட் விண்ணோக்கி நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி& சி.22 ராக்கெட் இன்று இரவு 11.41க்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்த ராக்கெட்டில் நீர், நிலம், ஆகாய மார்கங்களில் இயக்கப்படும் வாகனங்களின் செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிக்கும் வகையிலான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்& 1 ஏ என்ற செயற்கை கோள் பொருத்தப்பட்டுள்ளது. ராக்கெட் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் 29ம் தேதி காலை 7.11க்கு தொடங்கியது.

நேற்று பி.எஸ்&4 இயந்திரத்துக்கு எரிபொருள் நிரப்பும் பணி, ரீ& ஆக்ஷன் கன்ட்ரோல் முதல் நிலை (பி.எஸ்&1) போன்ற பணிகள் நிறைவு செய்யப்பட்டன. ராக்கெட்டின் அனைத்து கருவிகளும் சிறப்பாக இயங்குவதால்  ராக்கெட்டை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த டவர்களை அப்புறப்படுத்தும் பணி இன்று காலையில் தொடங்கியது.

தொடர்ந்து பி.எஸ்&2 இயந்திரத்துக்கு எரிபொருள் நிரப்பி, டவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு இரவு 11.41 க்கு செலுத்தும் வகையில் ராக்கெட் விண்ணோக்கி தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment