Friday, June 28, 2013
இலங்கை::இலங்கையின் தற்போதைய நிலை குறித்து தூரத்தில் இருந்து விமர்சிப்பதை தவிர்த்து, நடைமுறைக்குச் சாத்தியமான மாற்றத்தை ஏற்படுத்த பொதுநலவாய நாடுகள் முயற்சிப்பதாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை செயற்படுத்த இன்னும் பல திட்டங்களை செயற்படுத்த இலங்கை வேண்டியுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கையானது, தங்களுக்கு சமாதானத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண உள்நாட்டில் போட்டுக் கொண்ட பாதை அமைப்பு என கமலேஷ் ஷர்மா கூறியுள்ளார்.
பொதுநலவாய அமைப்பானது, மனித உரிமைகள், ஊடகத்துறை மற்றும் நீதித்துறை என்பற்றை மேம்படுத்தும் பொருட்டு இலங்கையில் செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment