Friday, June 28, 2013

இலங்கைக்கான தூதுவர்களுக்கும; உயர் ஸ்தானிகர்களுக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து விளக்கம்!

Friday, June 28, 2013
இலங்கை::வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இலங்கைக்கான தூதுவர்களுக்கும; உயர் ஸ்தானிகர்களுக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளித்தனர்.

வெளிவிவகார அமைச்சில் கடந்த புதன்கிழமை இந்த நிகழ்வு  இடம் பெற்றது.அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளிக்கையில் : தற்போது நாட்டில் கடும் விவாதத்துக்குட்பட்டிருக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் சம்பந்தமான பிரச்சனைகளை சகலதும் உள்ளடக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறையான தீர்வை காண்பதற்கு பாராளுமன்ற தெரிவூக்குழுவுக்கு மாற்றீடாக ஒன்றும் இல்லையென கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் பல மாகாண சபைகள், அரசியல் கட்சிகள், கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் பலரும் அண்மையில் பலதரப்பட்ட கருத்துக்களை இந்த பிரச்சனைகள் சம்பந்தமாக முன் வைத்ததுடன் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்பிக்கு முன் இந்த விடயங்கள் சம்பந்தமாக கட்டமைப்புடனான ஆக்கபூர்வமான அணுகுமுறை மிகவும் அவசியமெனவும் பரிந்துரைத்தனர்.

அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பாராளுமன்றத்திற்கு உட்பட்ட விவகாரமாக இருப்பதுடன் அது விசேடமாக பெரும்பாண்மையினரின் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டிய விடயமுமாகும். அதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பங்களிப்பு இன்றியமையாததெனவும் சுட்டிக்காட்டினார்.

பேராசிரியர் பீரிஸ் தூதுவர்களுக்கு மேலும் விளக்கமளிக்கையில் ,அரசாங்கமானது மேற்கூறப்பட்ட விடயங்களை அவசரமானதாக கருதுவதுடன் அதற்காகவே பாராளுமன்றத் தேர்வூக் குழுவையும் அதன் தலைவரையும் அங்கத்தவர்களையும் கடந்த வாரம் சபாநாயகர் நியமித்தார்.  இந்தத் தெரிவுக்குழு முதல் முதலாக எதிர்வரும் ஜூலை 09ம் திகதி பாராளுமன்றம் கூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இத்தெரிவுக்குழுவின் தலைவரும் சபை முதல்வருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாஇ தெரிவுக் குழுவின் நடவடிக்கைகள் சம்பந்தமாக முன்னுரிமைகள் மற்றும் அணுகு முறைகள் சம்பந்தமாக விரைவாக கருத்தொற்றுமைக்கு வர எண்ணியுள்ளதுடன் பரந்தளவிலான விவாதங்களுக்கு பின் முடிவுகள் எட்டப்படுமெனவும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

பதின்மூன்றாவது திருத்தம் சம்பந்தமான பிரச்சனைகளை  குறிப்பாக ஆராய்ந்தாலும் தெரிவுக்குழுஇ அரசியலமைப்பு சம்பந்தமாக முழுஅளவிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமென அவர் மேலும் விவரித்தார். சகலரதும் தமது கருத்துக்களை தெரிவுக்குழு முன் சமர்பிப்பதற்கான வழிமுறைகள் அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த குழுவில் அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் 19 பேரும் எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் 12 பேரும் உள்ளனர்.

இந்த ஒழுங்குமுறை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அரசாங்கம் பலமான அங்கத்துவத்தை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அவர் மேலும் விவரிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் தெரிவுக்குழு சம்பந்தமாக விவாதித்ததாகவும் அவர்களது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டதாக கூறினார். இந்த குழுவானது ஒரு குறிப்பிட்ட காலவரையறையை கொண்டு செயற்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

தெரிவுக்குழுவின் விவாதங்களில் சகல கட்சிகளும் பங்கேற்பதை அரசாங்கம் விரும்புவதாகவும் கூறினார். பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டம் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒழுங்கமைப்புக்கள் பற்றி பேராசிரியர் பீரிஸ் இராஜதந்திரிகளுக்கு விரிவான விளக்கமளிக்கையில் முப்பக்க நிகழ்வுகளாக வர்த்தக மன்றம், இளைஞர் மன்றம் மற்றும் மக்கள் மன்றம் என இவை 2013 நவம்பரில் நடாத்தப்படுமென கூறினார்.

இந்த நடவடிக்கைகளை இலகுபடுத்த மூன்று அமைச்சரவை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அரச துறையினராலும் தனியார் துறையினராலும் 69 திட்டங்கள் வர்த்தக மன்றத்திற்காக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பிரபல தொழில்அதிபர்கள் பொதுநலவாய நாடுகள் அல்லாதவற்றிலும் இருந்து கலந்துகொள்ள வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தூதுவர்களுக்கும், உயர் ஸ்தானிகர்களுக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்பற்றுவதில் உள்ள முன்னேற்றம் குறித்து விரிவான விளக்கமளித்தார்.

No comments:

Post a Comment