Friday, June 28, 2013
இலங்கை::ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தன்சானியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று தன்சானியா ஜனாதிபதி ஜகயா ரிஷோவைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம்- முதலீடு- வர்த்தகம்- தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத்துறைகளில் ஒத்துழைப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையில் துரித அபிவிருத்தி குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி விருப்பமான துறைகளில் முதலீடு செய்யூமாறு தன்சானிய முதலீட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.
நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவூள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பற்றியூம் ஜனாதிபதி தன்சானிய அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.
இந்த மாநாட்டுக்கு தன்சானியா முழு ஆதரவூ வழங்கும் என்றும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எப்போதும் ஆதரவளிக்கும் என்றும் தன்சானிய ஜனாதிபதி உறுதியளித்தார்.
அரச தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி குழுவினருக்கு நேற்று இராப் போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது.
அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ்- மகிந்தானந்த அளுத்கமகே.- மேர்வின் சில்வா மற்றும் ஜனாதிபதியின் செயலளார் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ;இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment