Friday, June 28, 2013
இலங்கை::அரசாங்கம் தமக்கு ஆதரவு வழங்கவில்லை என்று பொதுபல சேனா அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் தமக்கு பின்புலமாக இருந்து செயற்படுகிறது என்று சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பொதுபலசேனாவின் பிரதம அதிகாரி திலந்த விதானகே மறுத்துள்ளார்.
இதற்கு உதாரணமாக தாம் ஜனாதிபதியை சந்திப்பதற்கு பல முறை கோரிக்கை விடுத்தும் அது பலனளிக்கவில்லை.
காலம் தாமதித்தே அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இந்தநிலையில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் பொதுபலசேனாவின் தேரர் கேரம விமலகீர்த்திக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் உறவு காரணமாகவே அவர் தமது திட்டங்களுக்கு வருகை தந்ததாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அரசாங்கம் தமக்கு பின்புலமாக இருந்து செயற்படுகிறது என்று வெளியான தகவலை திலக்க விதானகே மறுத்தார்.
No comments:
Post a Comment