Friday, June 28, 2013
இலங்கை::அடுத்த வாரம் 19வது அரசியல் தீர்த்திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கண்டி – திகனவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை முழுவதும் 13ம் திருத்தச் சட்டத்தின் மீதான திருத்தங்கள் தொடர்பிலும், மாகாண சபைக
ளின் அதிகாரங்கள் தொடர்பிலும் பேசப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவும் இது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த வாரம் 19வது அரசியல் சீர்த்திருத்தம் இலங்கையின் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment