Friday, June 28, 2013
டேராடூன்::உத்தரகண்டில் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அவ்வப்போது தொய்வு ஏற்பட்டாலும், விமானப்படை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த செவ்வாய் கிழமை மழையில் சிக்கிய மீட்பு ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் பலியாகினர்.
இந்நிலையில், இன்றும் ஒரு ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரண மாக தடம் மாறி மலைப்பகுதியில் சிக்கியது. உடனடியாக அது ஹார்சில் நகரில் அவசரமாக தரையிறக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் திடீரென ஹெலிகாப்டர் தரையில் மோதி சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

No comments:
Post a Comment