Friday, June 28, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென மத்திய மாகாணசபையில் இன்றைய தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென மத்திய மாகாணசபையில் இன்றைய தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது அமுலில் உள்ள 13ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென ஆளும் கட்சி வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இரண்டு மாகாணசபைகளை இணைத்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டுமென கோரி வருகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென மாகாணசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.இதற்கு முன்னதாக வடமேல் மற்றும் தென் மாகாணசபைகளில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரின் ஆதரவுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானம் 30 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment