Saturday, June 1, 2013

மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளுக்கு சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது!

Saturday, June 01, 2013
இலங்கை::மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளுக்கு சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. மாத்தளை மனித புதைகுழி தொடர்பான விசாரணைகளின் போது நீதவான் இதனை அறிவித்துள்ளார்.
 
குறித்த புதைகுழிகளில் மரபணு பரிசோதனைகள் நடத்தப்பட்டதன் பின்னர் இன்டர்போலின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் எவரேனும் தகவல்களை வழங்க விரும்பினால் அது குறித்து அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
 
அது தொடர்பான அறிவித்தல் மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. 150க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அண்மையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மனித எலும்புக் கூடுகள் தங்களது கட்சி உறுப்பினர்களது என ஜே.வி.பி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment