Saturday, June 1, 2013

ஹட்டன் மக்கள் வங்கிக் கிளையின் ATM இயந்திரம் உடைப்பு; பணம் தப்பியது!.

Saturday, June 01, 2013
இலங்கை::ஹட்டன் நகரில் உள்ள மக்கள் வங்கிக் கிளையின் ATM தன்னியக்க இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயற்சிக்கப்பட்டுள்ளது.
 
நேற்று (31ம் திகதி) இரவு 11 மணியளவில் இனந்தெரியாத குழு குறித்த தன்னியக்க இயந்திரம் உள்ள அறையின் கதவு, கண்ணாடிகளை உடைத்து பணம் திருட முயற்சித்துள்ளது.
 
எனினும் தன்னியக்க இயந்திரத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் பணம் திருடப்படவில்லை என வங்கிக் கிளை முகாமையாளர் தெரிவித்தார்.
ஆனால் கதவு, கண்ணாடி உடைக்கப்பட்டதால் 20 ஆயிரம் ரூபாவிற்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹட்டன் பொலிஸார் கூறினர்.

No comments:

Post a Comment