Saturday, June 1, 2013

முன்னாள் புலி உறுப்பினர்கள் 50 பேர் கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதரங்களிடம் அரசியல் தஞ்சம்: திவயின!

Saturday, June 01, 2013
இலங்கை::முன்னாள் உறுப்பினர்கள் 50 பேர் கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதரங்களிடம் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர் என திவயின தெரிவித்துள்ளது. இவர்களில் சில பெண்களும் அடங்குகின்றனர்.
 
புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த முன்னாள் புலி உறுப்பினர்கள், மேற்குலக நாடுகளின் தூதரங்களிடம் பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாக பாதுகாப்பு தரப்பின் தகவல்கள் தெரிவித்தன.
 
அதேவேளை இவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதற்காக  தமிழ் அரசியல்வாதிகள் சிலர், தூதரங்களுக்கு அறிக்கைகளை வழங்கியிருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் திவயின கூறியுள்ளது. 

No comments:

Post a Comment