Saturday, June 1, 2013

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்!

Saturday, June 01, 2013
இலங்கை::ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இந்த ஆண்டில்
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இலங்கைப் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்று ஐரோப்பிய பாராளுமன்றிற்கு விஜயம் செய்திருந்தது.
 
பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் இந்தக் குழு விஜயம் செய்திருந்தது. இந்தப் பிரதிநிதிகள் குழுவினர் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். யுத்தத்தின் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிழுருத்தித் திட்டங்கள் குறித்து இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கியுள்ளனர்.

No comments:

Post a Comment