Saturday, June 29, 2013

வட மாகாணத்திற்கும் புதிதாக தாவரவியல் பூங்கா!

Saturday, June 29, 2013
இலங்கை::முப்பது வருட யுத்தம் நிறைவு பெற்ற வட மாகாணத்தில் புதிதாக தாவரவியல் பூங்கா ஒன்று அமைக்கப்படும். எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் தாம் இந்த பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தாவரவியல் பூங்கா மற்றும் பொழுது போக்கு அமைச்சர் ஜயரத்ன ஹேரத் தெரிவித்தார்.
 
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்காற்றுகிறது. எனவே உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களை மேலும் அதிகரிப்பதற்கு தாம் உத்தேசித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஹங்செல்லை ,ஹம்பாந்தோட்டை ,மிரிஜ்ஜவிலை ஆகிய பகுதிகளிலும் தாவரவியல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் இந்த பூங்காக்களுக்குத் தேவையான மிருகங்களை ஜப்பான் கொரியா சீனா தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சர் ஜயரத்ன ஹேரத் நேற்று முந்தினம் பேராதனை தாவரவியல் பூங்காவைப் பார்வையிடச் சென்றார் இந்த நிகழ்வின் போதே அமைச்சர் மேற்படி தகவலை தெரிவித்தார்.
 
 
 
 

No comments:

Post a Comment