Saturday, June 29, 2013
இலங்கை::விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றைக் காட்டி பொலிஸாரை அச்சுறுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதனையடுத்து அவரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதிவான் உத்தரவிட்டார்.
சுமார் மூன்றரை இலட்சம் ரூபாவைக் கொள்ளையிட்டுச் சென்று கொண்டிருந்த இந்த நபரைக் கைது செய்வதற்காக தம்புத்தேகம பொலிஸார் முயற்சித்த போது அவர் தன்னிடம் வைத்திருந்த விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டிப் பொலிஸாரை அச்சுறுத்தியிருந்தார்.
இதனையடுத்து பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment