இலங்கை::திருகோணமலை பிரதேச சபை உடன்படிக்கை குறித்து விசாரணை
2013 மே மாதம 25 சனிக் கிழமை- பி.ப 02:13
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள திருகோணமலை பிரதேச சபையுடன், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மேற்கொண்ட உடன்படிக்கை ஒன்று தொடர்பில், வெளிவிவகார அமைச்சு விசாரணை நடத்த தயாராகிறது.
வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் அறிக்கை ஒன்று கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், எதிர்வரும் வாரங்களில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரிகளுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கை தொடர்பில் எமது செய்திப்பிரிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனைத் தொடர்பு கொண்டு வினவியது.
இதற்கு பதில் வழங்கிய அவர், குறித்த உடன்படிக்கை கல்வி சார்ந்த விடயத்துக்காக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் அது தொடர்பில் விசாரணை நடத்துமாக இருந்தால், அதனால் தங்களுக்கு சிக்கல் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த உடன்படிக்கை தொடர்பில் திருகோணமலை பிரதேச சபையின் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment