Saturday, May 25, 2013
இலங்கை::மாங்குளம் பகுதியிலுள்ள கிணறொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
யுவதியின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
இந்த யுவதி கல்லொன்றுடன் கட்டப்பட்டு கிணற்றில் போடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன.
இதேவேளை அம்பாறை - நிந்தவூர், அரசடித்தோட்டம் பகுதியிலுள்ள பாழடைந்த கிணறொன்றில் இருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் ஏழாம் பிரிவைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.
சடலம் தொடர்பான விசாரணைளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு சம்மாந்துறை நீதவான் உத்தரவிட்டார்.
உயிரிழந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment