Tuesday, May 28, 2013

ஜோர்தானில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை பணிப் பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.!

Tuesday, May 28, 2013
இலங்கை::ஜோர்தானில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை பணிப் பெண்ணின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.
வாழைச்சேனை - கறுவாக்கோணி பகுதியில் இன்று காலை அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெற்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 
வாழைச்சேனை - கறுவாக்கேணி பகுதியைச் சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற யுவதியே ஜோர்தானில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடந்த 6ஆம் திகதி உயிரிழந்தார். இவரது பூதவுடல் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டிருந்தது.
 
பணிப் பெண்ணாக ஜோர்தானுக்கு சென்றுருந்த காந்திமதி , துப்பாக்கியால் தன்னை தானே சூட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கடந்த 19ஆம் திகதி அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
நாகேந்திரன் காந்திமதி 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி பணிப் பெண்ணாக ஜோர்தானுக்கு சென்றிருந்தார்.
 
இந்த சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் தாயும் ஜோர்தானில் வேறொறு வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றியுள்ளதுடன், அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.
இதேவேளை, ஜோர்தானில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யுவதியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
 
இந்த ஆர்ப்பாட்டம் கறுவாக்கோணி பகுதியிலிருந்து வாழைச்சேனை பிரதேச செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுக்குமாறு வலுயுறுத்தி பிரதேச செயலாளரிடம் மகஜரரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment