Tuesday, May 28, 2013

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்த உத்தேச பிரேணை நாளைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது சம்பிக்க ரணவக்க!

Tuesday, May 28, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்த உத்தேச பிரேணை  நாளைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தனிப்பட்ட நபர் பிரேரணையாக இந்த உத்தேச பிரேரணையை சமர்ப்பிக்க உள்ளார்.
 
மாகாணசபைகளை உருவாக்குதவற்காக இயற்றப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு இந்த பிரேரணையில் கோரப்பட உள்ளது, உத்தேச பிரேரணையின் ஆங்கில, சிங்கள பிரதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்மொழிப் பிரதி இன்று தயாரிக்கப்பட்டு விடும் எனவும் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
உத்தேச பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பித்தன் பின்னர் சகல அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதன் அவசியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் விளக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை முறைமை வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வாக அமையவில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது!

மாகாணசபை முறைமை வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வாக அமையவில்லை என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது, வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே மாகாணசபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
 
மாகாணசபை முறைமையை நாட்டில் அமுல்படுத்துவதற்காக 5000 இந்திய அமைதி காக்கும் படையினர் உயிர்த் தியாகம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் புலிபயங்கரவாதிகள் மாகாண சபை முறைமைய ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழ் மக்களின் பூர்வீக பூமியாக வடக்கு கிழக்கை கருதி இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட்டதாகவும் இது ஓர் வரலாற்று பிழை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீக பூமியாக நிரூபிக்க வரலாற்று சான்றுகள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment