Tuesday, May 28, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது!

Tuesday, May 28, 2013
ஜெனீவா::ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் மனித உரமை ஆணைக்குழுவின் நிதிச் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள
ப்படவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
சில நாடுகளின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் அதேவேளை, சில நாடுகளில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை கண்டு கொள்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் மனித உரிமை ஆணைக்குழு மௌனம் காத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு பக்கச்சார்பாகவோ அரசியல் உள்நோக்கங்களின் அடிப்படையிலோ இயங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் சுயாதீனத்தன்மையுடன் கூடியதாக அமைய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment