Tuesday, May 28, 2013
திருச்சி::சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால், திருச்சி - இலங்கை இடையேயான, "மிகின் லங்கா' விமானச்சேவை, வரும், 1 ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. இதனால், தமிழகத்தில், சுற்றுலா மையங்களை நம்பியுள்ள, வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். திருச்சியில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புக்கு, தினமும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும், வாரத்தில், நான்கு நாட்கள், மிகின் லங்கா விமானமும் இயக்கப்படு வருகின்றன.
திருச்சி::சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்ததால், திருச்சி - இலங்கை இடையேயான, "மிகின் லங்கா' விமானச்சேவை, வரும், 1 ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. இதனால், தமிழகத்தில், சுற்றுலா மையங்களை நம்பியுள்ள, வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். திருச்சியில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புக்கு, தினமும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமும், வாரத்தில், நான்கு நாட்கள், மிகின் லங்கா விமானமும் இயக்கப்படு வருகின்றன.
திருச்சி, சென்ட்ரல் பஸ் நிலையம், பெமினா ஓட்டல் வளாகம் ஆகிய இடங்களில் உள்ள,
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகமும், கன்டோன்மென்ட்டில் உள்ள, மிகின் லங்கா விமான
அலுவலகமும், அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த தாக்குதலில், சீமான் தலைமையில்
இயங்கும், "நாம் தமிழர்' கட்சியினர் உட்பட சில தமிழ் தீவிரவாதக்குழுக்களைச்
சேர்ந்தவர்கள் ஈடுபட்டுவந்தனர்.
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் இலங்கை பயணிகளை, தஞ்சை உள்ளிட்ட சுற்றுலா
தலங்களில், தமிழ் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்கிவந்தனர். இதனால்,
விமானம் மூலம், திருச்சி வரும் இலங்கை சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, கடுமையாக
குறைந்தது.
இதை அடுத்து, கடந்த சில வாரங்களாக, திருச்சியில் செயல்பட்டு வந்த, மிகின் லங்கா
விமான அலுவலகம் பூட்டப்பட்டது. அதோடு, இலங்கை - திருச்சி இடையிலான விமான சேவையை,
மிகின் லங்கா, அடியோடு ரத்து செய்யப் போவதாக, தகவல்கள் வெளியாகின.
எனினும், அந்த நிறுவனத்திடமிருந்து முறையான அறிவிப்பு வராததால், திருச்சி விமான
நிலைய நிர்வாகம், விமானம் ரத்து செய்யும் தகவல்களை மறுத்து வந்தது. இந்நிலையில்,
மிகின் லங்கா விமான சேவையை, வணிக காரணங்களுக்காக, வரும், 1ம் தேதி முதல்,
முற்றிலும் நிறுத்திக் கொள்வதாக, அந்த நிறுவனம், அதிகாரப்பூர்வ கடிதத்தை, திருச்சி
விமான நிலைய நிர்வாகத்திடம் வழங்கியுள்ளது. இதனால், வரும், 1ம் தேதி முதல், மிகின்
லங்கா விமான சேவை ரத்தாவது, உறுதியாகி விட்டது.
வியாபாரிகளுக்கு பாதிப்பு ;
இலங்கையில் இருந்து, ஏராளமானோர்,
தமிழகத்துக்கு சுற்றுலாவாக வந்து செல்கின்றனர். அவர்கள், தமிழக சுற்றுலா தலங்களை
பார்ப்பது மட்டும் அல்லாமல், ஏராளமான பொருட்களையும் வாங்குகின்றனர். ஜவுளிகள்,
கைவினைப்பொருட்கள் போன்றவற்றை வாங்குவதில், அதிக பணம் செலவிடுகின்றனர். தமிழ்
தீவிரவாத குழுக்களின் அடாவடி தாக்குதலால், இலங்கை சுற்றுலா பயணிகள் வரத்து
குறைந்து, விமானச் சேவை நிறுத்தப்படுகிறது.
பயணிகள் வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் சுற்றுலா மையங்களைச் சார்ந்துள்ள
வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, திருச்சியைச் சேர்ந்த
வியாபாரி, சின்னமணிநாடார் கூறியாதவது: தமிழகத்துக்கு, சுற்றலாவாக வருவோரில்,
இலங்கைவாசிகள் அதிகம். சுற்றுலாவாக வருவது மட்டும் இன்றி, ஏராளமான பொருட்களையும்
வாங்கிச் செல்கின்றனர். இதனால், சுற்றுலா மையங்களில் வியாபாரம் மேம்பட்டிருந்தது.
இதை தடுக்கும் வகையில், "நாம் தமிழர்' கட்சியைச் சேர்ந்த சீமான் போன்றோரின்
தலைமையில் செயல்படும் குழுவினர், சுற்றுலாவாக வந்த அப்பாவி பயணிகளை, தாக்குவது
தொடர்ந்ததால், பயணிகள் வரத்து குறைந்தது. இதனால், வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம்
ஏற்பட்டுள்ளது. ஓட்டல், டாக்சி போன்ற தொழில்களில் கடும் முடக்கம்
ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளிடம், அடாவடியாக நடந்து கொள்ளுவோர் மீது, தேசிய பாதுகாப்பு
சட்டப்படி, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், வெளிநாட்டில் இருந்து,
சுற்றுலாவாக வருவோருக்கு, நம் நாட்டின் மீது நம்பிக்கை ஏற்படும்.
இவ்வாறு, சின்னமணிநாடார் கூறினார்.
No comments:
Post a Comment