Tuesday, May 28, 2013
இலங்கை::நாடளாவிய ரீதியில் உள்ள போலி வைத்தியர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
போலி வைத்தியர்களைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்களை தேசிய ஔடதங்கள் அதிகார சபை மேற்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்தார்.

நாட்டின் அநேக பகுதிகளில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பில் தற்போது தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பரிந்துரைகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நலிந்த ஹேரத் குறிப்பிட்டார்.
இதற்கமைய, நாட்டிலுள்ள போலி வைத்தியர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment