Tuesday, May 28, 2013
இலங்கை::யாழ்ப்பாணம், வலிகாமம் பகுதியிலுள்ள இராணுவ முகாம்களில் பெரும்பாலானவற்றை வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது.
ஏற்கெனவே உள்ள பதினாறு முகாம்களிலிருந்து பல முகாம்கள் பலாலி நிரந்தர முகாமுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பகுதிகளில் மூன்று முகாம்கள் மட்டுமே இருக்கும் என்றும் இராணுவப் பயன்பாட்டிலுள்ள தனியார் நிலங்களுக்கு இராணுவம் வாடகை செலுத்திவருகின்றது என்றும் இராணுவப்பேச்சாளர் றுவான் வணிகசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன் துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்புகளுக்கு தேவையான நிலத்தை வழங்குமாறு இராணுவம் காணி அமைச்சரிடம் கேட்டுள்ளது.
இதற்காக இராணுவத்திற்காக மேலதிகமாக 6000 ஏக்கர் நிலத்தை பொறுப்பேற்கும் செயன்முறையை அரசாங்கம் தொடங்கவுள்ளது. அத்துடன் காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

No comments:
Post a Comment