Monday, May 27, 2013
இலங்கை::நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றிரவு சீனாவுக்கு பயணமாகவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தவிர, சீனாவின் பீஜிங் நகரில் இடம்பெறவுள்ள மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அங்கு நடைபெறவுள்ள ஆசிய அரசியல் கட்சி மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் கூறியுள்ளார்.
சீன ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க இடம்பெறும் இந்த விஜயத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடர்புபட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக மொஹான் சமரநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போத இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன், முக்கிய பல ஒப்பந்தங்ளும் கையெழுத்திடப்படும் என தெரிவிகிப்படுகிறது.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றிரவு சீனாவுக்கு பயணமானர்
No comments:
Post a Comment