Monday, May 27, 2013

வட மாகாண தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்றும் தாம் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை: இரா.சம்பந்தன்!

Monday, May 27, 2013
இலங்கை::வட மாகாண தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்றும் தாம் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட குழு உறுப்பினர்களின் கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில்
நேற்று நடைபெற்றது.

கூட்டத்தின் பின்னர் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
இரா.சம்பந்தன்.

தேர்தல்ல நாங்கள் போட்டியிடுரமா இல்லையா என்ற விஷயத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எமது கட்சி எமது பல கட்சிகள் அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பல கட்சிகள் இருக்கின்றார்கள். நாங்கள் எல்லோரும் கூடி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு முடிவு எடுக்கும். தேர்தல் அறிவிக்கப்படும் முன்பதாக அந்த விடயம் சம்பந்தமாக உறுதியாக என்னால் ஒரு கருத்தும் கூற முடியாது.

மற்ற விஷயத்த பற்றி அதாவது ஐாதிக ஹெல உருமய, விமல் வீரவங்ச, கோட்டபய ராஐபக்ஸ போன்றவர்கள் கூறுகின்ற கருத்தினை பொருத்த வரையில் அவர்கள் அரசாங்கம் அல்ல ஆனபடியால் அவர்களுடைய கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை அரசாங்கம் அவ்விதமான எந்த கருத்தும் இன்னும் கூறவில்லை''

வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியானதன் பின்னரே, தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வடக்க தேர்தல் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமைய, விமல் வீரவன்ச மற்றும் கோட்டாபாய ராஜபக்ஸ போன்றோரது கூற்றுகளுக்கு தாம் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் சம்பந்தன் இதன் போது குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment