Monday, May 27, 2013

இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அனுமதிக்க முடியாது: யாழ். மீனவர் சங்கம்!:இலங்கை - இந்திய கடற்பரப்பில் கூட்டாக மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்: இந்திய மீனவர்கள்!

Monday, May 27, 2013
இலங்கை::இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதை எக்காரணத்துக்காகவும் அனுமதிக்க முடியாது என யாழ். மாவட்ட மீனவர் சங்க சமாஜங்களின் சம்மேளனத் தலைவர் ஏ. எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். இந்திய மீனவர்கள் தமது கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க முடியும். இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து அவர்கள் மீன்பிடிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றத்துக்காக 45 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய இந்திய காரைக்கால் மீனவர்கள், இலங்கை இந்திய மீனவர்கள் கூட்டாகக் கலந்துபேசி, இலங்கை-இந்திய கடல் எல்லைக்குள் இணைந்து மீன்பிடிக்க ஏற்பாடு செய்யவேண்டும் எனக் கூறியிருந்தனர்.  காரைக்கால் மீனவர்களின் இந்தக் கருத்துப் பற்றி தொடர்புகொண்டு கேட்ட போதே எமிலியாம்பிள்ளை மேற்கண்டவாறு கூறினார்.அரசதுறை அதிகாரிகள் துரித நடவ டிக்கை மேற்கொண்டு இருநாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேசி, இந்திய- இலங்கை கடற்பகுதியில் கூட்டாக மீன்பிடி தொழில் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் மீனவர்களின் கைதுச் சம்பவங்கள் தொடராது என்றும் காரைக்கால் மீனவர்கள் கூறியுள்ளனர். அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் 2004ஆல் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை இந்திய மீனவர்களுடன் நாம் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். எனினும், அப்பேச்சு வார்த்தைகளால் எந்தப் பயனும் எமக் குக் கிடைக்கவில்லை. தொடர்ந்தும் அத்து மீறிய மீன்பிடிகள் தொடர்ந்த வண்ணமே இருப்பதாக யாழ் மாவட்ட மீனவர் சங்க சமாஜங்களின் சம்மேளனத் தலை வர் ஏ.எமிலியாம்பிள்ளை  தெரிவித்தார். இரு நாட்டு அரசாங்கங்களும் பேச்சு வார்த்தை நடத்தியே இந்தப் பிரச்சினைக் குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். அந்தப் பேச்சுவார்த்தைகளில் மீனவர்களின் பிரதிநிதிகளும் பங்குகொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம், இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் நுழைந்து மீன்பிடிப் பதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற் பரப்புக்குள் நுழைவதைத் தடுக்க இந்திய அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூரில் ரோலர் மீன்பிடி தடுக் கப்பட்டிருக்கும் நிலையில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வந்து மீன்பிடிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment