Wednesday, May 29, 2013

வவுனியாவில் பொலிஸ் காவலரணில் நிறுத்தாது சென்றுகொண்டிருந்த கார் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்!

Wednesday, May 29, 2013
இலங்கை::பொலிஸ் காவலரணில் நிறுத்தாது சென்றுகொண்டிருந்த கார் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று கெப்பிட்டிக்கொள்ளாவ பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கெப்பிட்டிக்கொள்ளாவ பகுதியில் இந்தக் கார் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இருப்பினும் இந்தக் கார் நிறுத்தாமல் செல்வதை அவதானித்த பொலிஸார், வவுனியா  6ஆவது மைல்கல்லில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு தகவலை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து 6ஆவது மைல் கல்லில் பொலிஸார் காரை இடைமறித்தபோதும், இந்தக் கார் நிறுத்தாமல் சென்றமையால் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதன்போது காரில் பயணித்த 4 பேரில் இருவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் தப்பியோடிய நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும்  வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....
 
கெப்பிட்டிக்கொள்ளாவவை சேர்ந்த ஒருவரும் கண்டியை சேர்ந்த மூவருமாக சீதுவை பகுதியில் இருந்து தேரர் ஒருவரின் காரை கடத்தி வந்தபோது கெப்பிட்டிக்கொள்ளாவ பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் கார் விபத்து நடந்த இடத்தில் நிறுத்தாமல் செல்வதை அவதானித்த பொலிஸார் வவுனியா 6ஆவது மைல்கல்லில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு தகவலை வழங்கியிருந்தனர்.

எனினும் 6 ஆவது மைல் கல் பொலிஸார் காரை மறித்தபோதும் அக் கார் நிறுத்தாமல் சென்றமையினால் அக் கார் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment