Wednesday, May 29, 2013

வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா!

Wednesday, May 29, 2013
சென்னை::ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை, வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு தொடங்கி வைத்தார்.
கர்நாடக மாநிலம் குடகு மலையில் இருந்து உற்பத்தியாகும் காவிரி ஆறு, தர்மபுரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் பாய்ந்தோடி தஞ்சை உள்பட 15 மாவட்டங்களை நெற்களஞ்சியமாக மாற்றி வருகிறது. தர்மபுரி மாவட்டம் வழியாக பாய்ந்தோடிய போதும், காவிரி நீர் தர்மபுரி மாவட்ட மக்களுக்கு எட்டா கனியாகவே இருந்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிலத்தடி நீரில் புளோரைடு அதிக அளவு இருப்பதால், மக்கள் எலும்பு மற்றும் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்களில் பாதிக்கப்பட்டனர்.

இதற்கு தீர்வு காண, கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தர்மபுரி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டினார். இதற்கான நிதி திரட்ட அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினும், ஜப்பான் சென்று ரூ.2900 கோடி ரூபாய் கடனாக நிதி பெற்றார். இதையடுத்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள், கடந்த 11.3.2010 முதல் நடந்தன. அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிகள் தாமதமாக நடந்து வருவதாக புகார் எழுந்தது.

பெரியாம்பட்டியில் நடந்த நாடாளுமன்ற நிதியளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், Ôஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் திமுக ஆட்சியில் 90 சதவீதம் முடிந்துவிட்டன. மீதமுள்ள 10 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. எங்களிடம் பணியை ஒப்படைத்து 2 மாத அ

மேடை அருகே ஒகேனக்கல் குடிநீர் திட்ட தண்ணீர் வரும் வகையில் 7 குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவின் போது, குழாயில் இருந்து தண்ணீர் பீறிட்டு வருவதை கண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே திண்ணூரிலும் தொடக்க விழா நடந்தது.
இத்திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 7679 ஊரக குடியிருப்புகளில் 50 சதவீத குடியிருப்புகளுக்கும், 16 பேரூராட்சிகளுக்கும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய 3 நகராட்சிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் இரு மாவட்ட மக்களின் 50 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது.

வகாசம் தாருங்கள். திட்டத்தை முடித்து கொடுக்கிறோம்Õ என்று கூறினார். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதற்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்புள்ள ஒகேனக்கல் திட்ட மைய அலுவலகம் முன்பு மேடை அமைக்கப்பட்டு கோலாகலமாக விழா நடந்தது.

No comments:

Post a Comment