Wednesday, May 29, 2013
இலங்கை::இந்திரத்ன தேரர் தீக்குளித்து, நாட்டுக்கும் பௌத்த கோட்பாட்டுக்கும் இழுக்கினையே ஏற்படுத்தியுள்ளார் ‘ எல்லா பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து பெற்றோல் ஊற்றித் தீக்குளித்தாலும் விலங்குகளைஅறுப்பதை நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை என தொல்பொருளியலாளர் மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்
இலங்கை::இந்திரத்ன தேரர் தீக்குளித்து, நாட்டுக்கும் பௌத்த கோட்பாட்டுக்கும் இழுக்கினையே ஏற்படுத்தியுள்ளார் ‘ எல்லா பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து பெற்றோல் ஊற்றித் தீக்குளித்தாலும் விலங்குகளைஅறுப்பதை நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை என தொல்பொருளியலாளர் மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்
இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் இஸ்தாபக தலைவரும் முன்னாள் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவருமாவார் .
அதேவேளை ஹெல உறுமய கட்சியின் செயலாளர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்திரத்ன தேரரின் தீக்குளிப்பை உயர்ந்த உயிர்த்தியாகம் என்று வர்ணித்துள்ளார் . அதேவேளை அக்கட்சி தேரரின் தீக்குளிப்பு தொடர்பில் ஒன்றுகொன்று முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் மேதானந்த தேரர் மேலும் தெரிவித்துள்ள தகவலில் தீக்குளிப்பதனால் எவ்விதத் தீர்வும் கிடைக்காது .’முழு உலகிற்கும் அன்பினை போதிக்கும் புத்தபிரானை நினைவுறுத்தும் புனிதநாளான வெசாக் தினத்தில் தேரரொருவர் புனித தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து நாட்டுக்கும், பௌத்த கோட்பாட்டுக்கும் இழுக்கையே தேடித்தந்துள்ளார் . இந்நாட்டிற்கு பண்டைய காலந்தொட்டு, மத மற்றும் சமூகப் பிரச்சினைகள் மேலெழும்போது அதற்கு பரிகாரமாக இருந்தவர்கள் இளம் பௌத்த பரம்பரையினரே. அவ்வாறான பௌத்த பரம்பரையினருக்கு இந்நிகழ்வானது தீயதொரு வழிகாட்டலையே வழங்கியிருக்கிறது.
அதனால் இவ்வாறான முட்டாள்தனமான நடவடிக்கைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருக்குமாறு இளம் பௌத்த பிக்குகளிடம் மிகவும் தாழ்வாகக் கேட்டுக்கொள்கிறேன்.
போதி மாதவன் தன்னுயிரை விலங்குகளின் உணவுக்காகத் தியாகம் செய்தார். அதுதான் நேரியது. இந்த இளம் துறவியின் தீக்குளிப்பு அவ்வாறனதென்று கருத முடியாது. இது புனித நடவடிக்கை எனக்கூறவியலாது. மாறாக இது தீக்குளிப்பின் மூலம் நிகழ்ந்துள்ளதொரு தற்கொலையே. சிலர் இதனை உயிர்த்தியாகம் எனக் கருதுகிறார்கள்.
அந்தத் துறவி யாருக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்தார்? மாட்டுக்காகவா? மற்றையது தனது உயிரை அழித்துக்கொள்ளும்போது ஒருவருக்கு அவர்மீது வெறுப்பும், குரோதமும் ஏற்படுகிறது. மிருகங்களைப் பற்றி அனுதாபம் ஏற்படுவதில்லை.
தன்னுயிரை அழித்து மாடுகளைக் கொல்வதையோ, ஏனைய விலங்குகளைக் கொல்வதையோ நிறுத்த முடியாது. அதுபோல அதனை சட்டத்தினாலும் இல்லாமற் செய்யவும் முடியாது. இது தொடர்பாக மக்களுக்கு அதுபற்றிய தெளிவுறுத்தலை ஏற்படுத்த வேண்டும். எல்லா பௌத்த தேரர்களும் ஒன்றிணைந்து கொழும்புக்கு வந்து பெற்றோல் ஊற்றித் தீக்குளித்தாலும் விலங்குகளை அறுப்பதை நிறுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை.
இந்த தேரர் எல்லைகளை மீறியிருக்கிறார். இந்த தேரரின் தீய நடவடிக்கையை சிலர் அடிநாதமாய்க் கொண்டு பல்வேறு கருத்துக்களைக் கூறிவருவதைக் காண்கிறேன். அவற்றை எக்காரணம் கொண்டும் ஏற்கவியலாது. இதன்மூலம் இல்லாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கக் கூடாது’ என்றும் மேதானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment