Wednesday, May 29, 2013
இலங்கை::வெளிநாடுகளுக்கு அபிவிருத்தி நிதியுதவிகளை வழங்கும் திட்டங்களை வகுங்கும் தருணங்களில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற சீன அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
சீனாவிற்கான 4 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை பீஜிங்கில் சந்தித்து கலந்துரையாடிய போதே அந்த வங்கியின் தலைவர் ஹு ஹுவாயிபெங்க் இந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
தமது வங்கியுடன் இலங்கை முன்னேடுத்துவரும் ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
வடக்கு அதிவேக வீதி நிர்மாணம் சீன அபிவிருத்தி வங்கியின் பிரதான பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.
1994 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சீன அபிவிருத்தி வங்கியானது, வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கடனுதவிகளை வழங்கும் பாரிய அமைப்பாக கருதப்படுகின்றது.
சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கிற்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று இன்று மாலை இடம்பெற்றது.

பீஜிங் நகரிலுள்ள சீன மக்கள் மண்டபத்தில் ஜனாதிபதியை வரவேற்பதற்காக உத்தியோகபூர்வ அரச விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வையடுத்து இரு நாட்டுத் தலைவர்களினதும் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு- பொருளாதாரம்- கலாசாரம்- முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட;டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பு – யாழ்ப்பாணம் அதிவேகப்பதை உட்பட பல பெருந்தெருக்கள் அபிவிருத்திக்கும் ரயில் பாதை அபிவிருத்திக்கும் சீனா உதவியளிக்கும் என சீன ஜனாதிபதி உறுதியளித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1957 இல் ஆரம்பமானதைத் தொடர்ந்து இலங்கை சீனாவுடன் மிக நெருங்கிய நட்புறவை பேணி வந்துள்ளது.
சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பீஜிங்கில் நடைபெறும் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த மாநாடு இன்று காலை ஆரம்பமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர் விஜயானந்த ஹேரத் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் வர்த்தகக் கண்காட்சியொன்றிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடக இணைப்புச் செயலாளர்
விஜயானந்த ஹேரத் குறிப்பிட்டர்.
அதனைத்தொடர்ந்து இன்று மாலை ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு சீனாவின் சியம் நகருக்குச் செல்லவுள்ளதாகவும் விஜயானந்த ஹேரத் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment