Wednesday, May 29, 2013
இலங்கை::கடந்த வெசாக் பௌர்ணமி தினமன்று மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மதகுரு போவத்தே இந்திரரட்ன தேரர் தொடர்பில் தற்போது விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக ஊடகவியலாளர்கள் சிலர் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடி உத்தரவு பிறப்பித்திருந்தார்.தற்கொலை செய்துகொள்ள முன்னர் மதகுரு உள்ளுர் ஊடகமொன்றுக்கு தனது தற்கொலை தொடர்பில் முன்கூட்டியே கருத்து வெளியிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து குற்ற விசாரணைப் பிரிவினர் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் வீடியோ காட்சிகளை பதிவு செய்த ஊடகவியலாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் தற்கொலையை தடுக்காது அதனை வீடியோ படமெடுத்ததாகத் தெரிவித்தே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment