Tuesday, May 28, 2013
இலங்கை::கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை நில அளவை திணைக்களத்தின் பிரதேச அலுவலகம்: அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்கள் திறந்துவைப்பு.

இன்றையதினம் கிளிநொச்சிக்கு வருகை தந்த அவர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் 260 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கிளிநொச்சி பிரதேச நில அளவை திணைக்களத்தினை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் தேவைகள் இனிவரும் நாட்களில் இவ் அலுவலகம் மூலம் விரைவுபடுத்தப்படும் அதன் மூலம் காணிகள் விரைவாக இளவீடு செய்யப்பட்டு மண்ணின்மகிமை திட்டத்தின் கீழ் ஆவணங்கள் வழங்க்கப்படுவதற்கும் ஏதுவாக அமையும் எனக்குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என எந்தவித பாகுபாடுமின்றி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட மீள் எழுச்சித்திட்டம் மற்றும் வடக்கின் துரித மீட்சித்திட்டம் ஆகியவற்றின் பிரதிதிட்டப்பணிப்பாளர் விஜயகிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட்பதியூதீன், காணி மற்றும் காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சிறிபால கம்லத், வட மாகாண ஆளுநர் சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டப்பணிப்பாளர் லியனகே, நில அளவையாளர் நாயகம் மகேஸ் பெர்னாண்டோ கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment