Wednesday, May 29, 2013

வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்!!

Wednesday, May 29, 2013
லண்டன்::மிகவும் சந்தோஷமாக வாழ தகுதியான நாடு என மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது.
(ஓ.இ.சி.டி. )எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு , உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தொழில் ரீதியாக வளர்ச்சி, பொருளாதாரம் , மக்களின் வருவாய், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நன்கு வளர்ச்சியடைந்ததும், அங்கு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்படி உள்ளன என்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் முதல் 10 நாடுகள் குறித்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

முதல் பத்து நாடுகளில் ஆஸி. முதலிடம்

இது குறித்துஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார ரீதியில் வளர்ச்சிஅடைந்த நாடுகளில் ஆஸ்திரேலியா மிகவும் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் 72 சதவீத தன்னிறைவு வளர்ச்சி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. முதலிடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் வயது வாரியாக அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 23 மில்லியன் மக்கள் தொகையில் 84 சதவீதம் பேர் தாங்கள் மிகவும் சந்தோஷமாகவும், திருப்திகரமான, தேவையான வருவாயினை ஈட்டி பொருளாதாரத்தில் முழு திருப்தி அடைந்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து இப்பட்டியலில் சுவீடன், டென்மார்க், கனடா, நார்வே,சுவிட்சர்லாந்து,அமெரிக்கா, ஐஸ்லாந்து, இங்கிலாந்து,நெதர்லாந்து ஆகிய 9 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment