Wednesday, May 29, 2013
இலங்கை::வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புலிகளளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்,18 வயதை பூர்த்தியடைந்த அனைவரினதும் வாக்குரிமை என்பவைகளை உறுதிப்படுத்தியதன் பின்னரே அது நடத்தப்பட வேண்டும் என்பதே வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் கோறி்க்கையாகும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,இலங்கைக்கான நோர்வே நாட்டின் உயர் ஸ்தானிகரிடத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.
இலங்கை::வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் புலிகளளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்,18 வயதை பூர்த்தியடைந்த அனைவரினதும் வாக்குரிமை என்பவைகளை உறுதிப்படுத்தியதன் பின்னரே அது நடத்தப்பட வேண்டும் என்பதே வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் கோறி்க்கையாகும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,இலங்கைக்கான நோர்வே நாட்டின் உயர் ஸ்தானிகரிடத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.
அண்மையில் இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனா நாயக்க,ஜக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா,தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் ரகு பாலசந்திரன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் இன்று நோர்வே உயர் ஸ்தானிகர் கிரேட்ச் லேஞன், மற்றும் கவுன்சிலர் ஆகியோருடனான சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் இதனை வலியுறுத்தியுள்ளார்.
நோர்வே தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் நிலவுவது தொடர்பில் இதன் போது கருத்துப்பரிமாறல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறினார். குறிப்பாக பொதுபலசேனாவுடன் நோர்வே நெருக்கத்துடன் செயற்படுவதாக மக்கள் மத்தியில் பேசப்படும் விடயம் குறித்து இங்கு பேசப்பட்டது.
இது குறித்து தப்பான கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக நோர்வே உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், எவரையும் பகைவர்களாக பாரக்காமல் அவர்களை நண்பர்களாக்கி அவர்களுக்கு சில விடயங்களை தெளிவுபடுத்துவது நல்ல விடயம் என்பதாக நோர்வே உயர் ஸ்தானிகர் இங்கு கூறியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
வடக்கிலிருந்து புலிகளளால் வெளியேற்றப்பட்ட 35 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களில் 24 ஆயிரம் குடும்பங்கள்,தற்போது தமது மீள்குடியேற்றத்தை உறுதி செய்யும் வகையில் சொந்த மாவட்டங்களில் பதிவுகளை செய்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்ட்டுவந்த நிவாரணத்தை கூட பெறாமல் மீள்குடியேற சென்றுள்ளனர். இருந்த போதும் அங்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் உரிய முறையில் வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.
தற்போது வாக்காளர் பட்டியல் பதியும் பணிகள் இடம் பெறுகின்றது. சில அதிகாரிகள் உரிய பதிவுகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தேர்தல் திணைக்களத்துடன் கலந்துரையாடவுள்ளோம். தேர்தல் செப்டம்பர் மாதம் நடை பெறும் எனில் இந்த குறுகிய காலத்தில் மீள்குடியேற்றம், மற்றும் ஏனைய செயற்பாடுகள் சாத்தியமா என்ற கேள்வியினை நீங்கள் எழுப்பலாம்,
ஆகக்குறைந்தது கட்டறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினரால் சிபாரிசு செய்யப்பட்ட விடயங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்காவுது நடை முறைப்படுத்த வேண்டும் என்பதை மக்கள் எதிர் பார்க்கின்றனர்.
அரசாங்கம் அதனை நடை முறைப்படுத்த முனைந்தாலும் சில தரப்புக்கள் அதனை தாமதப்படுத்துகின்ற நிலையும் இன்று காணப்படுகின்றது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,நோர்வே உயர் ஸ்தானிகர் மற்றும் கவுன்சிலர் ஆகியோரிடத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.
அதே வேளை முஸ்லிம் கட்சிகள்,மற்றும் ஜமிய்யத்துல் உலமா சபை என்பவற்றுடன் மீண்டும் சந்திப்பொன்றை எற்பாடு செய்வது குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், நோர்வே உயர் ஸ்தானிகரிடத்தில் கோறி்க்கையொன்றினை முன் வைத்த போது, அது குறித்து தமது நன்றிகளை நோர்வே உயர் ஸ்தனிகர், பாராளுமன்ற உறுப்பினரிடத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment