Tuesday, May 28, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் தலை நகர் பெய்ஜிங்குக்கு அருகில் அமைந்துள்ள 1200 வருடங்கள் பழைமைவாய்ந்த பௌத்த விகாரைக்குச்; சென்று வழிபட்டனர்!

Tuesday, May 28, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர்  தலை நகர் பெய்ஜிங்குக்கு அருகில் அமைந்துள்ள 1200 வருடங்கள் பழைமைவாய்ந்த பௌத்த விகாரைக்குச்; சென்று வழிபட்டனர்.
 
ஐந்தாம் நூற்றாண்டில் பாஹியன் தேரரால் உருவாக்கப்பட்ட இந்த விகாரையில் பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் புனித தந்தங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி 2007 ஆம் ஆண்டு தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலையொன்றை இந்த விகாரைக்கு வழங்கினார்.
சீனாவுக்கு ஏழு முறை விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இந்த விகாரைக்கு இரண்டாவது முறையாக விஜயம் மேற்கொண்டுள்ளார்..

மேலாதிக்கவாதிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்ட அபிவிருத்தி முறையில் இருந்து இலங்கையை முழுமையாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
சீனாவுக்கான நான்கு நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி,  சீனாவின் எக்ஸிம் வங்கியின் தலைவர் லி ருமிகுவை இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
 
இலங்கையில் பலவித அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்காக எக்ஸிம் வங்கி வழங்கும் ஆதரவு தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
 
அரசாங்கம் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள அபிவிருத்தி யோசனை தொடர்பாக எக்ஸிம் வங்கியின் பங்களிப்பை எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்..
 
இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான உறவினால் வேறு எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படாது  வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் G.L.பீரிஸ்!
 
இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையிலான உறவினால் வேறு எந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படாதென வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
இந்த உறவு இரண்டு நாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று அல்லவென சீன ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நட்புறவினால் வேறெந்தவொரு நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படாதெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஏனைய அனைத்து நாடுகளுடனும் இலங்கை சிறந்த நட்புறவை பேணுவதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் G.L.பீரிஸ், இலங்கையுடன் சிறந்த உறவைப் பேணி அதனூடாக ஏனைய நாடுகளை பிரச்சினைக்குள் தள்ளுவதற்கு சீனா எதிர்பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
 
பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் பின்னர் இலங்கையின் பொருளாதாரத்திற்கும், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் சீனா ஆதரவு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment