Wednesday, May 29, 2013
இலங்கை::நவநீதம்பிள்ளை இலங்கை வரலாம் அரசியல் பேசக்கூடாது. அத்தோடு விசாரணை அது இது போன்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
இலங்கை::நவநீதம்பிள்ளை இலங்கை வரலாம் அரசியல் பேசக்கூடாது. அத்தோடு விசாரணை அது இது போன்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
அரசாங்கம் விரைவில் காணி, பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்யும் பிரேரணைகளை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா, அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் அனைத்தும் இலங்கையில் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா எமக்கெதிராக முன் வைத்த பிரேரணையில் வட மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்திருந்தது.
அதனை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் மீது இறுதிக்கட்டத்தில் கடும் அழுத்தத்தை வழங்கவே ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை இலங்கை வருகின்றார். இவ்வாறான அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடி பணியாது தைரியத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அத்தோடு ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் நாயமாக நவநீதம்பிள்ளை இலங்கை வரலாம். வடக்கு கிழக்கிற்கு விஜயங்களை மேற்கொள்ளலாம். அரச தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தலாம்.
ஆனால் அரசியல் கருத்துக்களை பேசும் அதிகாரம் இங்கு கிடையாது. அத்தோடு விசாரணைகள் தொடர்பில் மூச்சுவிடக்கூடாது இங்கு வரலாம். போகலாம் அதுதான் வரையறை.திருத்தங்கள்,
13ஆவது திருத்தத்திலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களை ரத்துச் செய்யவும் மற்றும் பாராளுமன்றத்திற்கு சில பிரேரணைகள் கொண்டு வரப்படும் போது மாகாண சபைகளின் அங்கீகாரத்தை மத்திய அரசாங்கம் கோர வேண்டும் என்ற சட்டத்தை நீக்கவும் பிரேரணைகளை அரசாங்கம் கொண்டு வரவுள்ளது.கூட்டமைப்பு.
இவ்வாறான திருத்தங்கள் கொண்டு வந்த பின்னரே வட மாகாண சபை தேர்தலை நடத்த அரசு உத்தேசித்துள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது பிரச்சினை அல்ல. அதற்காக பிரிவினைவாத சட்டங்களை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்த முடியாது என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
No comments:
Post a Comment