Wednesday, May 29, 2013

தடுப்புக் காவலில் உள்ள புலிகள், மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பாக விபரங்களை வெளியிட தாம் தயார்: ரவிநாத் ஆரியசிங்க!

Wednesday, May 29, 2013
ஜெனீவா::தமது தடுப்புக் காவலில் உள்ள  புலிகள், மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பாக விபரங்களை வெளியிட தாம் தயார்,
 
 இலங்கைக்கான ஐ.நாவின் பிரதிநிதிகளில் ஒருவரான ரவிநாத் ஆரியசிங்கவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இதுவரை சுமார் 3,200 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள ஆரியசிங்க, இதில் 2,729 முறைப்பாடுகளே முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவற்றுள் 1,101 முறைப்பாடுகள் குறித்து தாம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை தமது தடுப்பில் உள்ள புலிகள் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் குறித்து விபரங்களை வெளியிட தாம் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இடம்பெயர்ந்த சகலரும் மீள்  குடியேற்றப்பட்டுள்ளனர்: ஐக்கிய நர்டுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரயசிங்க!
 
இடம்பெயர்ந்த சகலரும் மீள் குடியேற்றப்பட்டு விட்டதாக ஐக்கிய நர்டுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரயசிங்க தெரிவித்துள்ளார்.
 
இதன்படி, மொத்தமாக 295, 873 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக பலாலி உள்ளிட்ட இராணுவ முகாம்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்த படைவீரர்கள் அகற்றிக் கொள்வது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. மேலும் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விஸ்தரிக்க காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
 
இந்த விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் போது காணிகளை இழப்போருக்கு நட்ட ஈடு வழங்கப்படவுள்ளது.
 
போர் நிறைவடைந்த காலத்தில் இரண்டாயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பில் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தன, தற்போது நூறு சதுர கிலோ மீற்றருக்கும் குறைவான பகுதியில் மட்டுமே நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகளை தொடர வேண்டியுள்ளது என ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
 
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment