Wednesday, May 29, 2013

சுடர்ஒளி பத்திரிகை நிறுவனம் புதிதாக வெளியிடுகின்ற முஸ்லிம் முரசு பத்தரிகையிடம் 500 மில்லியன் ரூபா மானநஷ்டஈடு கோருகிறார் மாகாண அமைச்சர் மன்சூர்!

Wednesday, May 29, 2013
இலங்கை::சுடர்ஒளி பத்திரிகை நிறுவனம் புதிதாக வெளியிடுகின்ற முஸ்லிம் முரசு’ வாராந்த பத்தரிகை தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், 500 மில்லியன் ரூபா மானநஷ்டஈடு கோரியுள்ளார்.
 
இப்பத்திரிகை பொய்யான தகவல்களை வெளியிட்டு தனது கௌரவத்திற்கும், மானத்திற்கும் பங்கமேற்படுத்தியுள்ளது. இதனால் குறிப்பிட்ட பத்தரிகை ரூபா 500 மில்லியன் ரூபாவை தனக்கு நஸ்டஈடாகத் தர வேண்டுமென்று கோரி தனது சட்டத்தரணி மூலம் மாகாண அமைச்சர் எம்.எம்.மன்சூர் சார்பில் கடிதம் (Letter Demand))  ஒன்று குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்பட்டுள்ளது.
 
திருமலையில் பிரதி அமைச்சர் ஒருவரின் விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மன்சூர் மது போதையில் இருந்ததாகவும் அங்கு பெரும் ரகளையில் ஈடுபட்டதாகவும் அவரது பெயரை மறைமுகமாக தெரிவித்து இப்பத்திரிகை தனது முதலாவது இதழில் (2013/05/15) தகவல் வெளியிட்டிருந்தது.
 
இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டே தனது சட்டத்தரணி மூலம் தான்  இந்த (Letter Demand) மனுவை அனுப்பியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்
தெரிவித்தார்.

No comments:

Post a Comment