Wednesday, May 29, 2013
லாஷியோ::பர்மா நாட்டில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
பர்மாவின் வடகிழக்கில் உள்ள ஷான் மாகாணத்தின் தலைநகர் லாஷியோவில் முஸ்லிம்கள் புத்தமதத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. புத்த மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மண்ணெண்ணை ஊற்றி முஸ்லிம் ஒருவர் எரித்ததாக வந்த செய்தியை அடுத்து இந்த கலவரம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் முஸ்லிம்களின் மசூதிகள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் பர்மாவில் இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment